அயோத்தி ராமர் கோயிக்காக உலகின் மிகப்பெரிய பூட்டை தயாரித்த வயதான தம்பதியினர் .!

Scroll Down To Discover

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் பின் கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த ராமர் கோில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான நிதியைத் திரட்டும் பணிகள் கடந்த ஜனவரி 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு நன்கொடை அளித்து வருகின்றனர்

இந்நிலையில் உத்தரபிரதேசம், அலிகரில் உலகின் மிகப்பெரிய பூட்டை வயதான தம்பதியினர் உருவாக்கியுள்ளனர். சத்ய பிரகாஷ் சர்மா, அவரது மனைவி ருக்மானியுடன் சேர்ந்து இந்த பூட்டை உருவாக்கியுள்ளார். பித்தளை மற்றும் இரும்புடன் 300 கிலோ எடையுள்ள பூட்டை உருவாக்கியுள்ளனர்.பூட்டு செய்ய அவர்களுக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக ஆனது. பூட்டின் நீளம் 6 அடி 2 அங்கலமும், அகலம் 2 அடி 9.5 அங்கலமும் உள்ளது . சாவியின் எடை 12 கிலோ எடையுடன் தயாரித்து உள்ளனர்.

இதுகுறித்து தம்பதியினர் கூறியதாவது;- இந்த பூட்டை தயாரிக்க 60 கிலோவுக்கும் அதிகமான பித்தளை மற்றும் இரும்பு தேவைப்பட்டது.பூட்டுகள் இப்போது இறுதி கட்டத்தில் உள்ளன . இதுவரை ரூ.1 லட்சம் வரை செலவு செய்து உள்ளோம்.எங்கள் பெயருடன் அடையாளம் காணக்கூடிய ஏதாவது செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம் இதனை செய்து உள்ளோம். இந்த மிகப்பெரிய பூட்டை, அயோத்தியில் உருவாகவுள்ள ராமர் கோயிலுக்கு தயாரித்து வருவதாக கூறியுள்ளனர்.