அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ.1,000 கோடி நிதி வசூல் : அறக்கட்டளை உறுப்பினர் தகவல்

Scroll Down To Discover

உ.பி., மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை, மத்திய அரசு அமைத்தது.

இந்த நிலையில் 15 பேர் கொண்ட ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவரான கர்நாடக மாநில உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஸ்வபிரசன்னா தீர்த்த சுவாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;-அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் இதுவரை ரூ.1,000 கோடி நிதி வசூலிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து தரப்பினரும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்கி உள்ளனர். இது மக்களின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் காட்டுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.