ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிதி குவிந்து வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும் நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், 83 வயதான குகை சாமியார் ஒருவர் வழங்கிய நன்கொடை ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள குகையில் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர் சுவாமி சங்கர்தாஸ். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை வசூலிக்கப்படுவதை அறிந்த அவர், தான் சேமித்து வைத்திருந்த ரூ.1 கோடி நிதியை கோயில் கட்ட நன்கொடையாக வழங்க தீர்மானித்தார்.
அவரது கணக்கில் போதிய நிதி இருப்பதை உறுதி செய்த வங்கி அதிகாரிகள், இதற்கான நிதி திரட்டும் உள்ளூர் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த அவர்களிடம் சுவாமி சங்கர் தாஸ் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
இதுகுறித்து குகை சாமியார் சுவாமி சங்கர் தாஸ் கூறியதாவது:- “நான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குகையில் வசித்து வருகிறேன். என்னை காண வருகை தரும் பக்தர்களிடமிருந்து வரும் நன்கொடைகளில் நான் வாழ்கிறேன். விஎச்பி-யின் பிரசாரத்தைப் பற்றி அறிந்ததும், ராமர் கோயிலுக்கான எனது சேமிப்பு தொகையை நன்கொடையாக வழங்க முடிவு செய்தேன். ராமர் கோயிலுக்காக நாம் அனைவரும் நீண்ட கால கனவாக இருந்தது” என்றார்.
Leave your comments here...