அம்பானி வீட்டருகே வெடிபொருட்கள் நிரப்பிய கார் நின்ற விவகாரம்: மும்பை போலீஸ் கமிஷனர் இடமாற்றம்

Scroll Down To Discover

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, மஹாராஷ்டிராவின் தெற்கு மும்பையில் உள்ள, கார்மைக்கேல் சாலையில், ‘அன்ட்டிலா’ என்ற பிரமாண்ட பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த பிப். 25-ம் தேதிஇவரது வீட்டருகே, ‘ஜெலட்டின்’ குச்சிகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அந்த காரில் இருந்து, முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதம் கைப்பற்றப்பட்டது. காரின் உரிமையாளர் என கூறப்படும் மன்சுக் ஹிரன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் விசாரித்து மும்பையைச் சேர்ந்த, உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸே என்பவரை, சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ‘இந்த வழக்கில், போலீஸ் அதிகாரி சச்சின் வாஸேவை, சிலர், பின்னால் இருந்து இயக்குவதாகவும், அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை, சச்சின் வாஸே செயல்படுத்தி வருகிறார் எனவும் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் பரம்பிர் சிங் என்ற மற்றொரு மும்பை போலீஸ் அதிகாரியை விசாரணை வளையத்தில் கொண்டு வர என்.ஐ.ஏ.அதிகாரிகள் திட்டமிட்டனர்.

அதற்குள் அதிரடியாக இடமாற்றம் செய்து சிவசேனா அரசு உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக ஹேமந்த் நெக்ராலே நியமிக்கப்பட்டார். இந்த வழக்கின் பின்னணியில் உள்ள சதித்திட்டங்கள் அனைத்தும், விரைவில் வெளிச்சத்துக்கு வரும்’ என, விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.