அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட ‘குவாட்’ நாடுகளின் மலபார் கூட்டு போர் பயிற்சி..

Scroll Down To Discover

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன் ஆகஸ்ட் 26-29 வரை நடைபெறும் மலபார் கூட்டுப் பயிற்சியில் இந்திய கடற்படை கலந்து கொண்டுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்காவின் கடற்படைகளுக்கு இடையே நடைபெறும் பயிற்சியாக மலபார் கூட்டுப் பயிற்சி கடந்த 1992-ஆம் ஆண்டு தொடங்கியது. 2015-ஆம் ஆண்டு, இந்தப் பயிற்சியின் நிரந்தர உறுப்பினராக ஜப்பான் கடற்படையும் இணைந்தது. அதன்பிறகு 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படையும் சேர்ந்தது. மேற்கு பசிபிக் கடல் பகுதியில் 25-ஆவது மலபார் கூட்டுப் பயிற்சியை அமெரிக்கா நடத்துகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அது சுதந்திரமான, வெளிப்படையான பிராந்தியமாக நீடிக்கும்வகையில், 4 நாடுகளும் ஒத்துழைப்பை அளிப்பதற்காக, இந்த பயிற்சி நடக்கிறது. அமெரிக்க கடற்படை இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதில், 4 நாடுகளின் போர் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை பங்கேற்று சிக்கலான பயிற்சிகளில் ஈடுபடுகின்றன. இந்திய கடற்படை தனது ஐ.என்.எஸ்.சிவாலிக் போர்க்கப்பல், நீர்மூழ்கி தகர்ப்பு கப்பலான ஐ.என்.எஸ். கட்மட், கடல்சார் உளவு விமானம் ஆகியவற்றை பயிற்சியில் பங்கேற்க வைத்துள்ளது.