அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு

Scroll Down To Discover

அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டதால், கருப்பின மக்கள் நீதி கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். உயர் பாதுகாப்பு கொண்ட வெள்ளை மாளிகை அருகேயும் தினமும் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டங்களில் கடும் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க முடியாமல் போலீசார் திணறிவருகின்றனர். இதையடுத்து, கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
https://twitter.com/ANI/status/1268352866919444480?s=20
இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் அருகே உள்ள காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளது. காந்தி சிலையை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போராரட்டக்காரர்கள் தான் சிலையை அவமதிப்பு செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்