ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மொத்தம் 62 நாட்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில், அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார்.
இதில் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து பக்தர்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
Leave your comments here...