அனைத்து பள்ளி வாகனங்களிலும் கேமரா, சென்சார் கட்டாயம்: தமிழ்நாடு அரசு உத்தரவு..!

Scroll Down To Discover

பள்ளி வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவன் பள்ளி வளாகத்திலேயே நடந்து சென்றபோது ரிவர்ஸில் வந்த பள்ளி வேன் மோதி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மேலும் சில பள்ளி வாகன விபத்துகளும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. அனைத்து பள்ளி வாகனங்களிலும் கேமரா அமைப்பது, மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்வது உள்ளிட்டவற்றை முறைப்படுத்த கோரிக்கைகள் எழுந்தன.

தற்போது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் மற்றும் விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதில் பள்ளி மாணவர்கள் விபத்துக்குள்ளாவதைத் தடுக்கும் வகையில், அனைத்து பள்ளி பஸ்களிலும் கேமரா, சென்சார் பொருத்துவதை கட்டாயமாக்க தமிழக அரசு உத்தரவிட்டது அதன் தொடர்ச்சியாக மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரைவு, கடந்த ஜூன் 29-ம்தேதி உள்துறைச் செயலரால் அரசிதழில் வெளியிடப்பட்டது. இது தொடர்பான உத்தரவை வெளியிட அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த உத்தரவு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.