அந்தமானில் சிக்கித் தவி தவித்த தமிழக மீனவர்கள் ; உதவிகரம் நீட்டிய விஜயகாந்த்..!

Scroll Down To Discover

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 8க்கும் அதிகமான மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அந்தமானில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு அந்தமானில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை வாயிலாக செய்தி அறிந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அந்தமானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களுக்கு உடனடியாக உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தார். இதையடுத்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அந்தமான் தேமுதிக செயலாளர் உதயசந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீனவர்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யுமாறு உதயசந்திரனிடம், பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.


பின்னர் அந்தமான் தேமுதிக செயலாளர் தமிழக மீனவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறார். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள தமிழக மீனவர்கள், விஜயகாந்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். தங்களை மீட்டு தாயகம் அழைத்துச் செல்ல மத்திய, மாநில அரசுகளிடம் விஜயகாந்த் வலியுறுத்த வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.