வான்வெளியில் இலக்கை அதிவேகமாக சென்று தாக்கும் அபியாஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. ஏவு வாகனத்தில் இருந்து சீறிப்பாய்ந்த அபியாஸ் ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.இரட்டை பூஸ்டர்கள் பயன்படுத்தி அதிவேகத்தில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை இரு இலக்குகளை மிக துல்லியமாக தகர்த்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
https://twitter.com/rajnathsingh/status/1308375586604105728?s=20
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அபியாஸ் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனையின் மூலம் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. பல்வேறு ஏவுகணை அமைப்புகளை மதிப்பீடு செய்வதற்கான இலக்காக இது பயன்படுத்தப்படலாம். இந்த சாதனைக்கு ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கும் பிற பங்குதாரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Leave your comments here...