அதிமுக பிரச்னையில் திமுகவை ஏன் தேவையில்லாமல் இழுக்கிறீர்கள் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக வன்முறைக்கு மற்றும் கல்வீச்சுக்கு இடையே இந்தியாவின் நான்காவது தூண் என சொல்லும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள், அதிமுகவின் செயல்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு எனது தனிப்பட்ட வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
எதற்கெடுத்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுகவை குறை சொல்வது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கையான ஒன்று. இந்த பொதுக்குழு எவ்வாறு நடைபெற்றது. என்ன? என்பதெல்லாம் அப்பட்டமாக அனைவருக்கும் தெரியும். திமுகவுக்கும், அதிமுக பொதுகுழுவுக்கும் என்ன சம்பந்தம்?
இது கூட நிரந்தரமா என எனக்கு தெரியவில்லை. ஏன் என்றால் சசிகலா காலில் விழுந்து பதவி வாங்கியதை ஒரு வாரத்தில் மறந்தவர்கள், தற்போது நடந்த சம்பவத்தை மறக்க மாட்டார்களா என்ன? சட்டம் ஒழுங்கு எங்கும் மீறப்படவில்லை. உடனடியாக 144 தடை உத்தரவு போடபட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் போது அரசு தக்க நடவடிக்கை எடுத்தது. எடப்பாடி நடிக்கிறார்.
ஜெயகுமார் அடிக்கடி இப்போதெல்லாம் இப்படி பேசி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி விட நான் அரசியலில் மூத்தவன். தேவையில்லாமல் திமுகவை அழித்து விடுவேன் என்றெல்லாம் சொல்ல கூடாது. திமுகவை பொறுத்த வரை நாங்கள் எந்த கட்சியையும் அழிக்க வேண்டும் என நினைக்கவில்லை. நாங்கள் நீதிக்கு தலைவணங்கும் கட்சி தான் திமுக. தேவை இல்லாத பிரச்சனைகளை திமுகவை இழுக்க கூடாது.
கஞ்சாவை பத்தி பேசுகிறார் எடப்பாடி. இவருடைய ஆட்சியில் தான குட்கா ஊழல் வந்தது. எந்தெந்த அமைச்சர் எவ்வளவு வாங்கினார்கள்? என அவருக்கே தெரியும். எடப்பாடி பழனிச்சாமி 3 பேரை கொலை செய்து விட்டு, செங்கோட்டையன் எனும் புண்ணியவான் மூலம் தான் வெளி வந்தவர் எடப்பாடி பழனிசாமி.
கொடநாடு கொலை வழக்கில் புது புது ஆட்கள் எல்லாம் விசாரிக்கப்படுகிறார்கள். அதிர்ச்சி தரும் வகையில் எல்லாம் தகவல்கள் வர காத்து கொண்டு இருக்கிறது. எனவே அனைவருக்கும் நல்ல தீனி காத்து கொண்டு இருக்கிறது. எங்களுக்கு அதிமுக பங்காளி தான். பிஜேபி தான் எதிரி. எங்கள் இரத்தம் தான், சீக்கிரம் எங்களுடன் வந்து இணைந்து விடுவார்கள்.
Leave your comments here...