இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கோட்டையில் இன்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதன் பின்னர் தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தினார் முதலமைச்சர் பழனிசாமி.
பின்னர் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
* 4வது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைகிறேன்.
* மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ள நான், மக்களிடம் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளேன்.
* அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன்.
* சுதந்திரத்தின் பலனை அனைவரும் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
* கொரோனா தடுப்பு தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்போம்.
* தமிழக அரசு, பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கொரோனாவை வெல்லும் என்பதை உறுதிபட கூறுகிறேன்.
* தமிழக அரசின் நிதி ஆதாரத்தை கொண்டு கொரோனா தடுப்பு பணிக்கு ரூ6,650 கோடி செலவிடப்பட்டுள்ளது.
* வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது இயக்கத்தின் மூலம் 64,661 வெளிநாடுவாழ் தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
* 4.18 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பத்திரமாக தமிழகத்தில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
* சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்திலிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும்
* வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம், சிறப்பு ஊதியம் ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.8,500 ஆக உயர்த்தப்படும்
* சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிட பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்படும்.
* அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* கொரோனா தொற்றை எதிர்கொள்ள 1,29,000 படுக்கைகள் தயாராக உள்ளன.
* கொரோனாவை எதிர்கொள்ள 1800 மருத்துவர்கள், 7 ஆயிரம் செவிலியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
* 2.01 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதம் முதல் இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
* நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.
* கொரோனாவுக்கு சித்தமருத்துவ சிகிச்சை முறையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட சிறப்பு விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.அதன்படி இந்தாண்டில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகள்;-
* டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனர் க.செல்வகுமாருக்கு வழங்கப்பட்டது.
* துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது.
* முதல்வரின் சிறப்பு விருது உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக சவுமிய சுவாமிநாதனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
* மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்த 5 பேருக்கு முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
* பெண்கள் நலனுக்காக உழைத்தவர்களுக்கான விருது 2 பேருக்கும், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது 7 பேருக்கும், கொரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களுக்கு 27 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
* சிறந்த தொண்டு நிறுவனம் – சென்னையை சேர்ந்த சி.எஸ்.ஐ காதுகேளாதோர் பள்ளி,
* சிறந்த சமூக பணியாளர் – திருச்சி சாந்தகுமார்,
* சிறந்த மருத்துவர் – சேலம் சியாமளா,
* சிறந்த நிறுவனம் – அதிக மாற்றுத்திறனாளிக்கு வேலைவாய்ப்பு தந்த சக்தி மசாலா நிறுவனம்,
* சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கி – சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி.
இந்த சிறப்பு விருதுகளை முதலமைச்சர் எடப்படி பழனிசாமி வழங்கினார். இதனை தொடர்ந்து விருது பெற்ற அனைவரும் முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Leave your comments here...