அதானி குழுமத்தின் 310 மில்லியன் டாலர் மதிப்பிலான 6 வங்கி கணக்கள் முடக்கம்..!

Scroll Down To Discover

சுவிஸ் வங்கிகளில் தொழிலதிபர் அதானி குழுமத்தின் 310 மில்லியன் டாலர் மதிப்பிலான 6 வங்கி கணக்கள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த, ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனம் ‘அதானி’ குழும நிறுவனங்கள் சந்தையை தவறாக கையாண்டு, கணக்குகளில் மோசடிகள் செய்துள்ளதாக குற்றம்சாட்டி கடந்த ஜனவரியில் வெளியிட்ட அறிக்கை பங்கு சந்தையில் அதிர் வலையை ஏற்படுத்தியது.

இதனை மறுத்த அதானி குழுமம் ஹிண்டன்பர்க் மீது சட்டநவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் சுவிஸ் வங்கி நிர்வாகம் அதானி குழுமத்தின் 310 மில்லியன் டாலர் மதிப்பிலான 6 வங்கி கணக்குகளை முடக்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவலில், சுவிட்சர்லாந்தில் ‛‛ கோதம் சிட்டி” என்ற புலனாய்வு இணையதள செய்தி நிறுவனம், 2021-ம் ஆண்டு, அதானி குழுமம் பண மோசடி, மற்றும் பங்குபரிவர்த்தனையில் மோசடி செய்துள்ளதாக செய்தி வெளியிட்டதை ஹிண்டன்பர்க் தனது ‛எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்தது.

இதையடுத்து சுவிட்சர்லாந்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் விசாரணை நடத்தி, அதானியின் 310 மில்லியன் டாலர் மதிப்பிலான 6 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது. இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சுவிஸ் வங்கி தொடர்பான செய்தியில் உண்மையில்லை என தெரிவித்துள்ளது.