அண்ணாமலையுடன் கார்த்தி சிதம்பரம் எடுத்துக்கொண்ட புகைப்படம் – இணையத்தில் வைரல்.!

Scroll Down To Discover

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்பியுமான கார்த்தி சிதம்பரம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் திடீரென்று சேர்ந்து எடுத்த செல்பி போட்டோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிரும், புதிருமான இரண்டு அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றாக விமானத்தில் பயணித்தனர். அந்த வகையில் தான் தற்போது இணையதளத்தில் ஒரு படம் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியின் எம்பியாக கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சேர்ந்து எடுத்து கொண்ட செல்பி போட்டோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செல்போனில் செல்பி எடுக்க கார்த்தி சிதம்பரம் எம்பி, திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு ஆகியோர் போட்டோவில் உள்ளனர்.
https://twitter.com/KartiPC/status/1565263352750014464?s=20&t=mKmOp7XclPTRMFf2Buft1Q
இந்த போட்டோவுக்கு கார்த்தி சிதம்பரம் டுவிட்டர் மூலமாக பதிலளித்துள்ளார். அதில், ‛‛பிரபு நீங்கள் ட்ரோலுக்கு தயாராகிவிட்டீர்கள். பிரபு என்பவர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தான். எனவே பிற யோசனைகள் செய்ய வேண்டாம்” என கூறியுள்ளார். இந்த படத்துக்கு தற்போது பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.