அடல் ஓய்வூதியத் திட்ட பதிவுகள் 3 கோடியைத் தாண்டியது..!

Scroll Down To Discover

அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மொத்த பதிவுகளின் எண்ணிக்கை 4.01 கோடியை மார்ச் மாதத்தில் தாண்டியுள்ளது. இதில். 99 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் 2021-22ஆம் நிதியாண்டில் துவங்கப்பட்டுள்ளன.

அனைத்துப் பிரிவு வங்கிகளின் தீவிர பங்களிப்புக் காரணமாகவே இந்த பிரமாதமான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 71 சதவீத பதிவுகள் பொதுத்துறை வங்கிகளிலும், 19 சதவீத பதிவுகள் மண்டல கிராம வங்கிகளிலும், 6 சதவீத பதிவுகள் தனியார் வங்கிகளிலும் 3 சதவீத பதிவுகள் கட்டணம் மற்றும் சிறு நிதி வங்கிகளிலும் செய்யப்பட்டுள்ளன.

பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை பொதுத் துறை வங்கிப் பிரிவில் ஆண்டு இலக்கை எட்டியுள்ளன. இதர வங்கிப் பிரிவுகளில், தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஆண்டு இலக்கை எட்டியுள்ளது.

அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 2022 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி செய்யப்பட்டுள்ள பதிவுகளில் சுமார் 80 சதவீத சந்தாதாரர்கள் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்திட்டத்தை தேர்வு செய்துள்ளனர். 13 சதவீதம் பேர் ரூ.5,000 ஓய்வூதியத்திட்டத்தை தேர்வு செய்துள்ளனர். மொத்த சந்தாதாரர்களில் 44 சதவீதம் பேர் பெண்கள். மொத்த சந்தாதாரர்களில் 45 சதவீதம் பேர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.