அகமதாபாத்தின் ஒரு நாள் கலெக்டராகிய 11 வயது சிறுமி – என்ன காரணம் தெரியுமா..?

Scroll Down To Discover

மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்ட அகமதாபாத்தை சேர்ந்த சிறுமி அவரது விருப்பம் போல ஒரு நாள் கலெக்டராக இருந்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி தான் புளோரா. அகமதாபாத்தை சேர்ந்த ஃப்ளோரா அசோடியா என்ற சிறுமி மூளைக் கட்டியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னரும் சிறுமியின் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது.

இந்நிலையில் அச்சிறுமிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற பெருங்கனவு இருந்ததும் ஆனால் மோசமான உடல் நிலை காரணமாக அதற்கு சாத்தியமில்லாது போனதும் தொண்டு நிறுவனம் வாயிலாக அகமதாபாத் ஆட்சியர் சந்தீப் சாங்க்ளேவுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து அச்சிறுமி ஒரு நாள் ஆட்சியராக பணியாற்றும் வாய்ப்பை சந்தீப் சாங்க்ளே அளித்தார். இதன்படி நேற்று கலெக்டரின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் அகமதாபாத் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு நாள் அகமதாபாத் ஆட்சியராக அச்சிறுமி பணியாற்றினாள். ஆட்சியர் இருக்கையில் அமர்ந்த சிறுமிக்கு பலரும் பரிசுகள் அளித்து விரைவில் உடல் நலம் பெற வாழ்த்தினர்.

இது குறித்து அகமதாபாத் கலெக்டர் கூறுகையில், சிறுமி புளோரா கலெக்டராக வேண்டும் என்பது அவரது விருப்பம் எனவும், அவரது விருப்பத்தை நிறைவேற்றி தருமாறு தொண்டு நிறுவனம் தனக்கு தெரிவித்திருந்தது, அவர்களது கோரிக்கையை ஏற்று நான் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பி அந்த பெண்ணை அழைத்து வந்து அவரது ஆசையை நிறைவேற்றி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.