ஃபேஸ்புக் நிறுவனம் ஜியோ நிறுவனத்தில் ரூ. 43,574 கோடி முதலீடு

Scroll Down To Discover


இந்தியாவில் உள்ள பல கோடி மக்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இவை அனைத்தும் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ திகழ்கிறது. தற்போது ஜியோவும், பேஸ்புக் நிறுவனமும் கை கோர்த்துள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸின் ஜியோ நிறுவனத்தின் 9.99 சதவீத பங்குகளை ஜியோ நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் ரூ. 43,574 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் ஜியோ நிறுவன மதிப்பு ரூ.4.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோமார்ட் என்ற பெயரில் ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தை களம் இறக்கியது. ஃபேஸ்புக் நிறுவனம் ஜியோவில் முதலீடு செய்ததன் மூலம் ஆன்லைன் வர்த்தகத்திற்கு வாட்ஸ் அப் மூலம் மக்களை இணைக்க முடியும் என கூறப்படுகிறது. ஏற்கெனவே 250 மில்லியன் பயனர்களை கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், இந்த முதலீட்டின் மூலம் இந்தியாவில் மேலும் வளர முடியும் என தொழில்துறை வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.