முகக்கவசம் அணியாமல் இருந்த டிரம்ப் ஒரு வழியாக முகக்கவசம் அணிந்தார் ..!

உலகம்

முகக்கவசம் அணியாமல் இருந்த டிரம்ப் ஒரு வழியாக முகக்கவசம் அணிந்தார் ..!

முகக்கவசம் அணியாமல் இருந்த  டிரம்ப் ஒரு வழியாக முகக்கவசம் அணிந்தார் ..!

கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் அதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தும்மினால்,அல்லது இருமினால் அவர்களிடம் இருந்து நமக்கு நோய் தாக்காது என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது.

ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடக்கத்தில் இருந்து மாஸ்க் அணிய மறுத்து வந்தார்.
அவரது மனைவி மாஸ்க் அணியும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் தினந்தோறும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது டிரம்ப் மாஸ் அணிவதில்லை.கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவியபோதும் பொதுவாக முகமூடி அணிவதைத் தவிர்த்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சனிக்கிழமையன்று வாஷிங்டனுக்கு வெளியே உள்ள ஒரு ராணுவ மருத்துவ நிலையத்தில் காயமடைந்த வீரர்கள் மற்றும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களைச் சந்திக்க வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்திற்கான வருகை தந்தார். அப்போது டிரம்ப் மாஸ்க் அணிந்து இருந்தார். ட்ரம்ப் முன்பு முகமூடி அணிய மறுத்து வந்த அவர் ,மற்ற அமெரிக்கர்களை மாஸ்க் அணியும்படி கேட்டுக் கொண்டார்.வைரஸின் பரவலை தடுக்க மாஸ்க்குகளை பயன்படுத்துமாறு உயர் பொது சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் வெள்ளிக்கிழமைக்குள் கிட்டத்தட்ட 1,34,000 அமெரிக்க உயிர்கள் பலியான நிலையில், ட்ரம்ப் மட்டுமே அணிய மறுத்தது தலைமைத்துவத்தின் குறைபாட்டைக் காட்டியதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்

Leave your comments here...