8 போலீஸ்காரர்களை கொன்ற ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை..!

இந்தியா

8 போலீஸ்காரர்களை கொன்ற ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை..!

8 போலீஸ்காரர்களை கொன்ற  ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை..!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அருகே, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபேயை பிடிக்கச் சென்ற போலீசார் மீது, ரவுடி கும்பல், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில், ஒரு டி.எஸ்.பி., மூன்று எஸ்.ஐ.,க்கள் உட்பட, எட்டு போலீசார் பரிதாபமாக இறந்தனர்.

மேலும் ஏழு போலீசார் படுகாயம் அடைந்தனர். தலைமறைவாக உள்ள ரவுடி விகாஷ் துபேயை பிடிக்க, போலீசார் தேடுதல் வேட்டையை துவக்கியுள்ளனர். துபேயின் கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, என்கவுன்டர் நடந்த இடத்துக்கு அருகில் உள்ள சவுபேபூர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள சில போலீசாருக்கு, ரவுடி கும்பலுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. துபேயை பிடிப்பதற்காக போலீசார் வரும் தகவலை, சவுபேபூர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள சிலர், முன் கூட்டியே ரவுடி கும்பலுக்கு கசியவிட்டதும் தெரிய வந்தது.இதன் அடிப்படையில், அந்த ஸ்டேஷனின் பொறுப்பு அதிகாரி, சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஒரு இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்களுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தலைமறைவாக உள்ள ரவுடி விகாஷ் துபேயை துப்பு கொடுப்பவருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை ரூ.5 லட்சமாக உத்தரபிரதேச அரசு உயர்த்தி இருந்தது.

இந்த நிலையில், 40 தனிப்படை போலீசார் டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் தனி தனிப் பிரிவாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று முன் தினம் டில்லி சொகுசு ஓட்டலில் அவன் தங்கியிருப்பதாக சிசிடிவி காட்சிகள் வெளியானது. இந்நிலையில் இன்று காலை மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டார்.விசாரணைக்குப் பின்னர் உத்தர பிரதேச போலீசிடம் விகாஸ் துபே ஒப்படைக்கப்பட்டான்.

அவனை உத்தர பிரதேச அதிரடிப்படை போலீசார், இன்று பலத்த பாதுகாப்புடன் கான்பூருக்கு கொண்டு வந்தனர்.இன்று காலை 7 மணியளவில் கான்பூரை அடைந்தபோது, விகாஸ் துபே இருந்த வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. விகாஸ் துபேயும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மற்ற போலீசார் அனைவரும் விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


அப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய ரவுடி விகாஸ் துபே தப்ப முயன்றுள்ளான். அவனை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதில் பலத்த காயமடைந்த விகாஸ் துபே சிறிது நேரத்தில் உயிரிழந்தான். அவன் இறந்ததை காவல்துறை உறுதி செய்தது. விகாஸ் துபே உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கார் கவிழ்ந்த விபத்தில் 4 போலீசார் காயமடைந்ததாகவும், விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கான்பூர் ஐஜி மோகித் அகர்வால் தெரிவித்தார்.


என்கவுன்டர் குறித்து மேற்கு கான்பூர் எஸ்.பி., கூறுகையில்:- கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதும், காயமடைந்த போலீஸ்காரர்களின் கைத்துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு விகாஸ் துபே தப்பிச் செல்ல முயன்றான். அவரை சரணடையச் செய்ய போலீசார் முயன்றனர். அப்போது போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால், போலீசார் பதிலுக்கு சுட்டனர்,’ என்றார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...