செங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை விவகாரம் : தலைமறைவான திமுக நிர்வாகி புருஷோத்தமன் டிஎஸ்பி அலுவலகத்தில் சரண்…!

அரசியல்தமிழகம்

செங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை விவகாரம் : தலைமறைவான திமுக நிர்வாகி புருஷோத்தமன் டிஎஸ்பி அலுவலகத்தில் சரண்…!

செங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை விவகாரம் : தலைமறைவான திமுக நிர்வாகி புருஷோத்தமன் டிஎஸ்பி அலுவலகத்தில் சரண்…!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த நைனார் குப்பத்தில் கடந்த 24 ஆம் தேதி சசிகலா என்ற பெண் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்யூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பெயரில் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அன்றே உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதன்மறுநாள், தனது தங்கையின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி அவரது அண்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.கவைச் சேர்ந்த தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருஷோத்தமன் ஆகியோர் தனது தங்கையை கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் சசிகலா குளிக்கும்போது வீடியோ எடுத்து அவரை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாகவும் வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுவிடுவதாக மிரட்டியதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதனடிப்படையில், காவல்துறையினர் தி.மு.கவைச் சேர்ந்த தேவேந்திரன் மற்றும் அவரது சகோதாரர் புருஷோத்தமன் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தவிவகாரம் இன்று தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இதுதொடர்பாக தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘செங்கல்பட்டு நைனார்குப்பம் சசிகலாவை தற்கொலைக்கு தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில் இளைஞரணி நிர்வாகி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் தீர விசாரிக்கவேண்டும். அவர் குற்றம் செய்திருந்தால் அவரை கைது செய்யும் நடவடிக்கையை திமுக இளைஞரணி வலியுறுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில், பெண்ணின் தற்கொலைக்குக் காரணமான விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில் 2 பேரை போலீசார் தேடி வந்த நிலையில் புருஷோத்தமன் என்பவர் மதுராந்தகம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தார்.தலைமறைவாக உள்ள திமுக நிர்வாகி தேவேந்திரனை தேடும் பணி தீவரம் என கூறப்படுகிறது.

Leave your comments here...