சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க முடிவு..!

அரசியல்தமிழகம்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க முடிவு..!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்  தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க முடிவு..!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்ததுடன், கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது. சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பெர்னார்டு சேவியர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார்.தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கனவே உதவி ஆய்வாளர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவமானது, அமெரிக்காவில் உயிரிழந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டுடன் ஒப்பிட்டு பேசப்பட்டது. சினிமா பிரபலங்கள் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.இந்நிலையில் சேலத்தில் சர்வதேச கால்நடை பூங்காவின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நீதிமன்ற அனுமதி பெற்று தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்.“ என தெரிவித்துள்ளார்.மேலும், “காவல்துறையினருக்கு, பொதுமக்கள், வியாபாரிகள் போன்றவர்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments here...