குமாரகோவில் வேளிமலை முருகன்கோவிலில் உள்ள அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய பாஜகவினர்…!

தமிழகம்

குமாரகோவில் வேளிமலை முருகன்கோவிலில் உள்ள அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய பாஜகவினர்…!

குமாரகோவில் வேளிமலை முருகன்கோவிலில் உள்ள அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய பாஜகவினர்…!

கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் ஊழியர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஊரடங்கு நீட்டிப்பால் இந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட கோயில்களில் பணிபுரிபவர்களுக்கு நிவாரண நிதி வழங்கியது.

ஊரடங்கில் படிப்படியாகத் தளர்த்த மத்திய அரசு உத்தரவிட்டிருக்கும் சூழலில் ஜூன் 8 முதல் வழிப்பாட்டு தலங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஊரடங்கு தளர்வில் ஜூன் 8ஆம் தேதி முதல் உணவகங்கள், வழிப்பாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கிய அரசு ஏன் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மறுக்கிறது என மக்கள் விமர்சித்து வந்த நிலையில் இப்போது மத்திய அரசு இந்த தளர்வுகளை வழங்கியுள்ளது. மேலும் கோவில்கள் நாளை திறக்கப்படுமா என்று தமிழக அரசு முறையாக இனியும் அறிவிக்கவில்லை. மேலும் கோயில்கள் திறக்கப்படாதல் அதில் பணி புரியும் ஊழியர்கள் அர்ச்சகர்களுக்கு பலரும் உதவி புரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த புகழ் பெற்ற குமாரகோவில் வேளிமலை முருகன் ஆலயத்தில் பணி புரியும் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாஜக பிரமுகரான மார்த்தாண்டம் சுரேஷ் ஏற்பாட்டில் கன்னியாகுமரி மாவட்ட பாஜக துணை தலைவர் குமரி ப.ரமேஷ் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார். இதில் மார்த்தாண்டம் பா.ஜ.க. கிளை தலைவர் சுரேந்திரன், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.!

Leave your comments here...