1 ரூபாய் இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியை பாராட்டிய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்…!

இந்தியாதமிழகம்விளையாட்டு

1 ரூபாய் இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியை பாராட்டிய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்…!

1 ரூபாய் இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியை பாராட்டிய  கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்…!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டிக்கு, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை ஆலாந்துறையை அடுத்த வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள். 85 வயதான இவர் தினந்தோறும் அதிகாலை 4 மணியளவில் எழுந்து தனது வீட்டு வேலைகளை செய்து விட்டு பின்னர் தான் நடத்தி வரும் இட்லி கடையை தொடங்கி விடுகிறார். யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஆளாக இட்லி, சட்னி, சாம்பார் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இட்லி வியாபாரத்தை தொடங்கிய மூதாட்டி ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்தார். பின்னர் விலைவாசி உயர்வால் படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு இட்லி ரூ.1-க்கு விற்று வருகிறார். கடந்த 30 ஆண்டுகளில் ஒரு இட்லிக்கு 75 பைசா மட்டுமே விலை உயர்த்தியுள்ளது.

இதனால் 1 ரூபாய் இட்லி வாங்க காலையிலேயே கமலாத்தாள் பாட்டி கடையில் கூட்டம் அலைமோதுகிறது. தள்ளாத வயதிலும் கூன்விழுந்த முதுகோடு அடுப்பு தீ மூட்டி புகையின் நடுவே ஆவி பறக்க, பறக்க பாட்டி கமலாத்தாள் சுறுசுறுப்பாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.இவரது கடைக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், அரசு, தனியார் நிறுவனங்களுக்கு செல்வோர் தினமும் வந்து இட்லி வாங்கி செல்கிறார்கள். கமலாத்தாள் பாட்டியை சுற்றுப்புற கிராமங்களில் 1 ரூபாய் இட்லி பாட்டி என்று சொல்லும் அளவுக்கு பிரபலமாகி விட்டார்.இவர் குறித்த செய்திகள் வெளியாகி இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் அமலான முழு ஊரடங்கால் வியாபாரம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது.இதை அடுத்து அரசியல் கட்சிகள் , தொண்டு அமைப்புகள் ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு உதவி செய்தனர்


இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், கமலாத்தாள் பாட்டியின் பணி மகாத்தானது என கூறியுள்ளார். மேலும், ஊரடங்கிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பது மிக உன்னதமான செயல் என குறிப்பிட்டுள்ள முகமது கைஃப், நமக்கெல்லாம் இது ஒரு முன்னுதாரணம் என்று தெரிவித்துள்ளார்.

Leave your comments here...