முடித்திருத்துபவர்கள், டிரைவர்களுக்கு தலா ரூ.5000 ஆயிரம் வழங்கப்படும் : கர்நாடக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

இந்தியா

முடித்திருத்துபவர்கள், டிரைவர்களுக்கு தலா ரூ.5000 ஆயிரம் வழங்கப்படும் : கர்நாடக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

முடித்திருத்துபவர்கள், டிரைவர்களுக்கு தலா ரூ.5000 ஆயிரம் வழங்கப்படும் : கர்நாடக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.ஊரடங்கால் வருவாயையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்துவரும் மக்களின் கஷ்டத்தை போக்க மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 700-ஐ நெருங்கி வருகிறது. இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூர் நகரப்பகுதி, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 மாவட்டங்கள் சிகப்பு மண்டலங்களாக உள்ளது. 12 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாக உள்ளன. செவ்வாய் நிலவரப்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் (331) பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று (மே 6) ரூ.1,610 கோடி மதிப்பிலான கொரோனா நிதித் திட்டங்களை பல்வேறு தரப்பினருக்கு அறிவித்துள்ளார். இதில் முக்கிய அம்சமாக மாநிலத்தில் உள்ள 230,000 முடி திருத்துபவர்கள், 775,000 ஓட்டுநர்கள் ஒரு முறை இழப்பீடாக ரூ.5,000 வழங்கப்படும் என கூறியுள்ளார்.சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அவர்களின் மின் கட்டணத்தை 2 மாதங்களுக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. முதல்வரின் முடிவுக்கு கர்நாடக முடி திருத்துபவர்கள் சங்கம், ஓட்டுநர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.வீட்டுக்கு பயன் படுத்திய மின் கட்டணத்தில் ஒரு சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

கர்நாடகாவில் 3 கோடியே 3 லட்சம் நெசவாளர் உள்ளனர். அவர்களின் பாதிப்புக்கு 80 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. அத்துடன் கைத்தறி நெசவாளர் 54 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகளுக்கு தலா 2000 ரூபாய் நேரடியாக செலுத்தப்படுகிறது. தமிழகமும் இம்முடிவை பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave your comments here...