பெண்களுக்காக தேசிய அளவில் நடைபெற்ற சிறந்த வெல்டருக்கான போட்டி.!

விளையாட்டு

பெண்களுக்காக தேசிய அளவில் நடைபெற்ற சிறந்த வெல்டருக்கான போட்டி.!

பெண்களுக்காக தேசிய அளவில் நடைபெற்ற சிறந்த வெல்டருக்கான போட்டி.!

கெம்பி இந்தியா மற்றும் நெக்ஸ்ட்ஜன் பிளாஸ்மா நிறுவனங்கள் இந்திய வார்படத் தொழில்நுட்ப நிறுவனம், கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து  2019 ஆம் ஆண்டுக்கான பெண்களில் தேசிய அளவிலான சிறந்த வெல்டருக்கான போட்டியை ஏற்பாடு செய்திருந்தன.

புதிய கண்டுபிடிப்புடன் பெண்களில் சிறந்த வெல்டருக்கான தேசிய அளவிலான போட்டி புதுதில்லி, புனே, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய 4 மண்டலங்களில் நடைபெற்றிருப்பது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. வார்படத் தொழிலில் ஈடுபட்டுள்ள பல பெண் வெல்டர்கள் அவர்களது தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தியதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருப்பதை கொள்கை வடிவமைப்பாளர்கள் கண்டு உணர்ந்தனர். இந்தப் போட்டியில் சுமார் 52 பெண் வெல்டர்கள் பங்கேற்ற போதிலும், இறுதிப் போட்டிக்கு 13 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். இறுதிப் போட்டி  சென்னையில் உள்ள கெம்பி இந்தியா நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய நிபுணர்கள் அவர்களது செயல்திறனை ஆய்வு செய்து மதிப்பீடு செய்தனர்.

ஷீல்டெட் மெட்டல் ஆர்க் வெல்டிங் செயல்பாட்டில் 3ஜி நிலையில் கட்டுமான வெல்டர் மற்றும் கேஸ் மெட்டல் ஆர்க் வெல்டிங் செயல்பாடு, 6ஜி நிலையில் கேஸ் மெட்டல் ஆர்க் வெல்டிங் செயல்பாடு, மெல்லிழையம் ஆர்க் வெல்டிங் செயல்பாடு ஆகிய 4 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. 2 கட்டங்களாக மதிப்பீடு நடைபெற்றது. முதலில் படத்தொகுப்பு தேர்வும், அதன் பின்னர் ஊடுகதிர் படமெடுத்தலும் நடைபெற்றது. இந்தப் போட்டியின் முடிவுகள் 10.12.2019 அன்று அறிவிக்கப்படும் என்றும், வெற்றியாளர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன் முதலாக நடைபெற்ற போட்டியில் 18 பேர் மட்டுமே பங்கேற்ற போதிலும், தற்போது நடைபெற்ற போட்டியில் 52 பேர் பங்கேற்றிருப்பது இந்தப் போட்டி நடத்துவது பொருத்தமானதுதான் என்பதை நிரூபித்துள்ளது. இம்முறை நடைபெற்ற போட்டியில் மாணவர்களுக்கென்று புதிய பிரிவு ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. பெண்கள் அதிக அளவில் இதில் பங்கேற்றிருப்பது, எந்தத் திறனும் பெண்களுக்கு தடையாக இல்லை என்பதையும், திறமை என்பது பாலினத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பதையும் பறை சாற்றியுள்ளது. இது போன்ற போட்டிகள் பெண் வெல்டர்களுக்கான பாதையைத் திறந்திருப்பதாகவும், அவர்கள் சரியான வழியைத் தேர்வு செய்யவும், புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கவும் வழிவகுத்துள்ளன என்று சென்னை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.

Leave your comments here...