காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் மீது வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..?

சமூக நலன்

காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் மீது வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..?

காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் மீது வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..?

கோவை மாவட்டம் சிறுமுகையிலுள்ள காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன். கடந்த மாதம் 29ஆம் தேதி கோவையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் பங்கேற்று பேசிய காரப்பன், இந்து கடவுள்களான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, கடந்த 19ஆம் தேதி இந்து முன்னணியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் விமல் கோவை மாநகர பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து, சமூக நல்லிணக்கத்துக்கு சவால் விடும் வகையிலும், மத வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய காரப்பனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 21ஆம் தேதி புகார் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவின்படி, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் மத உணர்வை தூண்டுதல் (505(1)(b)), குறிப்பிட்ட மதத்தை குறித்து இழிவாக பேசுதல் (295(a)) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரு பிரிவுகளும் ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளாகும். அதனால் விரைவில் காரப்பன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தன் இழிவான பேச்சுக்கு காரப்பன் மன்னிப்பு கேட்கும் 32 வினாடி வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இதை ஏற்க மறுத்துள்ள ஹிந்து அமைப்பினர் ‘மத நம்பிக்கையை சீர் குலைக்கும் வகையில் ஒருவர் என்ன வேண்டுமானாலும் பேசி மன்னிப்பு கேட்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிட இயலாது; அதை சட்டமும் அனுமதிப்பதில்லை’ என்றனர்.

மேலும் இது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் சிறுமுகை யில் உள்ள காரப்பன் சில்க்ஸ் கடையில் இனி எந்த இந்து உணர்வாளரும் பொருட்கள் வாங்க மாட்டோம் என தீர்மானிப்போம். அவரது மன்னிப்பு போலியானது. இவரது ஸ்தாபனம் மட்டுமல்ல இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் இயக்கத்தைச் சேர்ந்த அனைவரது வர்த்தக ஸ்தாபனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.

Comments are closed.