மணிலாவில் காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

சமூக நலன்

மணிலாவில் காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

மணிலாவில் காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

மணிலாவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் . ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு புறப்பட்டார். முதல் கட்டமாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிலிப்பைன்ஸ் அதிபரை சந்தித்த ராம்நாத் கோவிந்த் இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இரு நாடுகளிடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 35 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துரையாடினார்.

 

Picture For: The President Kovind unveils the bust of Mahatma Gandhi in Manila, Philippines

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைக்கப்பட்டு உள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த இன்று காலை திறந்து வைத்தார்.மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு மணிலாவில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.